Peace and Conflict

“மஹிந்தவும் தமிழர்களும்”

நாரதர்

‘எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் இரத்த வெறி பிடித்த கோரிக்கைகளை வழங்க நாம் தயாராக இல்லை.ஆனாலும் ஆகக் குறைந்தது ஆனந்த சங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒத்துழைக்கக் கூடிய வகையில்,நாம் இருக்க வேண்டும்.நியாயமாக வேண்டும்.”என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ இவ்வருடத்திற்கான சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்ததனை அனைவரும் அறிவர்.

ஜனாதிபதி அக்கூற்றை தெரிவிக்கும் பொழுது மிகவும் கம்பீரத் தோற்றத்தில் அமர்ந்திருந்த சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட வடக்கு கிழக்கு பிரிப்பை எதிர்த்தவராவார்.ஆனால் மஹிந்தர் அதனை வகுத்தார்.அதன் மூலம் பேரினவாதிகள் பேரின்பம் அடைந்தனர்.இதுவா மஹிந்த ராஜபக்~ அராசங்கத்தின் நியாயம்? (சரியான அரசியல் பேச்சு………………….)

தற்பொழுது இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சொல்லொன்னாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.ஆனால் மஹிந்த சிந்தனை அரசு தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியே பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் சிறந்த முடிவு என தெரிவிக்கின்றது.

ஆனால் யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ள நீதியானது தொற்று நோய்களும்,n~ல் தாக்குதல்களும்,குண்டுமாறிகளுமாகும்.ஆனால் தமிழருக்கு நீதி வழங்குவதாக இப்பொழுதும் அரசு தெரிவிக்கின்றது.

அரசாங்கம் கைப்பற்றிய சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எடுக்கும் முயற்சியின் அளவாவது அங்கு வாழும் தமிழர்களின் புனர்வாழ்வில் அக்கறை செலுத்துவதில்லையே.

இதுவா மஹிந்த சிந்தனை அரசினால் தமிழர்களுக்கு வழங்கப்படும் நீதி?…….