அகதிகளில் நிரம்பி வழியும் மட்டக்களப்பு

நாரதர்

‘அய்யோ பகலில் கேட்கும் மல்ரி பெரல் (Multi Barrel) வெடிச் சத்தங்களினால் என் நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது.அய்யோ பாவம் மட்டக்களப்பு சனங்கள்.” என கடந்த வாரம் மட்டக்களப்பு சென்று வந்த இளம் யுவதியொருவர் இவ்வாறு புலமபுகின்றார்.

இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிரத்தாக்குதல்களினால் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மட்டக்களப்பு நகரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் படும் துன்பங்களையும் நெருக்கடிகளையும் வார்த்தைகளில் சொல்லமுடியாதளவிற்கு எல்லை மீறிச் செல்கின்றது.இது அம்மக்கள் மீது ஏற்பட்ட இரண்டாவது சுனாமியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையினர் கூட இம்மக்களுக்கு போதுமானளவு உணவுகளை வழங்க முடியாதுள்ளதென தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரு தசாப்த காலங்கள் இடம்பெற்ற யுத்தத்தினால் பல கசப்பான சம்பவங்களுக்கு முகம்கொடுத்தும் இன்னும் யுத்தத்தின் மீது இரு தரப்பும் ஆர்வம் கொள்வது நாட்டை மேலும் சீரழிவிற்கே இட்டுச் செல்லும்.

நவீன உலகில் மக்கள் இன்னோரன்ன நன்மைகளையும் சுதந்திரங்களையும் அனுபவித்து வருகின்ற வேளையில் இலங்கை வாழ் தமிழர்கள் மட்டும் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எவராலுமே உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு நகரில் நிரம்பி வழியும் அகதிகள் மீது சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பாராமுகத்துடன் இருப்பதொன்றும் வியக்கத்தக்க விடயமல்ல.

மல்ரி பெரல் மூலம் ஒரு தடவை தாக்குதல் நடத்துவதற்கு மட்டும் நான்கு லட்சம் ரூபா செலவிடப்படுகிறது.இது போல் பல தாகுதல்கள் ஒரு நாளைக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு மேற்கொள்ளப்படும் செலவை மட்டக்களப்பில் நிரம்பி வழியும் அகதிகள் மீதும் கரிசனை காட்டலாமல்லவா?

Print this post

2,364 views

2 Comments

  1. நன்றி நாரதா் உங்களது சமூக உணா்வுக்கு.உங்களது கட்டுைர வரேவற்கத்தக்கது.கட்டாயம் இவ்வாரான விடயங்கைள ெவளிச்சத்துக்கு ெகாண்டு வரேவண்டும்.நானும் மட்டக்களப்ைபச் ேசா்ந்தவன் என்ற வைகயில் இவற்ைற நன்கு அறிேவன்.இேத ேநரம் எவ்வித காரணமும் இல்லாமல் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் ேகடயமாகவும் பாவிக்கப்படுகின்றனா்.இன்று எவ்வித காரணமும் இல்லாமல் ெகாைல ெசய்யப்படுகின்றனா்.இவற்ைற யாா் ெசய்கிறாா் என்பது ெதாியாமல் உள்ளது.துங்களது ெசாந்த நிலத்தில் விவசாயம் ெசய்ய முடியாமல் உள்ளனா்.இவற்ைற தட்டிக்ேகட்டால் நாைள உயிருக்கு உத்தரவாதம் இல்ைல.எனேவ தனிேய தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பைத ஞாபகப்படுத்த விரும்புகிேறன்.
    இவ்வைகயான கட்டுைரகள் தமிழில் வரும்ேபாது ெசாற்பமானவா்கேள வாசிப்பாா்கள்.எனேவ இதைன ஆங்கிலத்திலும் ேபாடுவதற்து முயற்சிக்கவும்.காரணம் வாசகா்கள் அதிகம் ஆங்கிலத்தில் வாசிப்பவா்களாகத்தான் உள்ளாா்கள்.மற்றும் ெகாழும்பில் இருப்பவா்களுக்கு மட்டக்களப்பின் நிைலைம ெதாியாது. நள்றி

  2. ur post revealas the real scene of baticalloa,but it could be better if u posy it in english also,because most of the readers r from all around the world.

Leave a Reply

This is a moderated forum. Comments are the sole responsibility of the person posting them. Please do not post comments that are off topic, defamatory, abusive, threatening or an invasion of privacy. Comments are automatically scanned for spam and obscenity.

Comments are only approved if they are in line with the site guidelines. Those that do not will be edited or deleted without prior intimation. Comment approval may take up to 24 hours.

Thanks in advance for your civil and constructive engagement.

Spam protection by WP Captcha-Free

About Groundviews

Located at the Centre for Policy Alternatives in Colombo, Sri Lanka, Groundviews is a citizen journalism website that uses a range of genres and media to highlight critical perspectives on governance, reconciliation, human rights, the arts and literature, democracy and other issues. The site has won two international awards, including the prestigious Manthan Award South Asia in 2009. The grand jury's evaluation of the site noted, "What no media dares to report, Groundviews publicly exposes. It's a new age media for a new Sri Lanka... Free media at it's very best!"

cezarneaga.eu