Peace and Conflict

14 இணையத்தளங்கள்…

-நாரதர்-

கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு முற்பகுதியில் இலங்கையின் உள்நாட்டுப்போர் தீவிரமாக இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ இராணுவத்திற்கு எதிராகவோ (அரசாங்கத்திற்கு) வாய்திறந்து தமது உண்மையான விமர்சனங்களையும் நடுநிலைமையான கருத்துக்களையும் தெரிவிக்கமுடியாமல் தினறின அப்போதைய ஊடகங்கள்.விசேடமாக தமிழ்.

ஆனால் நவீன ஊடகங்களின் வருகையினால் இந்நிலைமை தகர்த்தெறியப்பட்டுள்ளது.உதாரணமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முன்பு விமர்சிக்கமுடியாததொரு சூழ்நிலையே காணப்பட்டது.அவ்வாறு செயற்பட்டால், ஊடகங்களின் வாய்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு அவை வரலாற்று சான்றுகளாகியுள்ளன.

இருந்த தமிழ் ஊடகங்களும் பெரும்பாலும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டும் வந்துள்ளன.

இணையத்தளங்கள், இணையத்தள வானொளிகள் மற்றும் இணையத்தள தொலைக்காட்சிகளின் வருகைகளினால்; ஒரு பக்க கருத்துக்கள் மாத்திரம் வெளியாகுவதனை தவிர இவற்றில் பலரது கருத்துக்களும் ஒலிக்கத் தொடங்கின.

அவற்றில் ஒரு விளைவாகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற கருணாவிற்கு சார்பாக மட்டும் இன்று 14 இணையத்தளங்கள் கருத்துக்களை பிரசுரித்து வருகின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

உண்மையில் சைபரின் வருகையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இவை.(நவீன ஊடகங்கள்).(இவை நன்மைக்கும் உபயோகப்படும் தீமைக்கும் உபயோகப்படும்)